பெற்றோருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி: பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு

schedule
2017-01-05 | 21:59h
update
2026-06-26 | 21:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Government Bus confiscation would provide compensation to parents: in Perambalur Court

விபத்தில் குழந்தையை இழந்த பெற்றோருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை பெரம்பலூர் நீதிமன்றம் ஜப்தி செய்தது

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டின் (வயது 38), ஸ்டெல்லா காணிக்கை மேரி (வயது 33), இவர்களது குழந்தை மகிமா கெயிலின் (வயது 3), மகிமா கெயிலின் கடந்த 2012 ஆம்ஆண்டு நவம்பர் மாதம், 21ம் தேதியன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை சென்று விட்டு பேருந்தில் பெரம்பலூர் திரும்பி வருவதற்கா பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, பேருந்திற்காக காத்திருந்து மகிமா கெயிலின் உள்ளிட்ட பலரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் மகிமா கெயிலின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 15 ம் தேதியன்று மகிமா கெயிலின் தந்தை அகஸ்டியன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க 2014 ஆண்டு, அக்டோபர் மாதம் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அரசு போக்கு வரத்து கழகம் வழங்காமல் காலம் தாழ்த்தியதால் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வட்டியுடன் சேர்த்து 5.லட்சத்து 86 ஆயிரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவு பிறப்பித்து 2016 ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி அரசு பேருந்தை ஜப்தி செய்யவும், நீதிபதி நசீமா பானு உத்திரவிட்டார். அதன் பேரில், இன்று அமீனா ஜோதிவேல் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள் சென்னையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்ற அரசு பேருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்ததை, ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில் உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 21:55:40
Privacy-Data & cookie usage: