இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி : பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு

schedule
2017-02-15 | 13:56h
update
2026-06-25 | 17:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Government bus to provide compensation for confiscation : In Perambalur Court

இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை பெரம்பலூர் நீதிமன்றம் ஜப்தி செய்து உத்திரவிட்டது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, இவர் கடந்த 2005 ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 தேதியன்று தனது சொந்த ஊரான சிலம்பூருக்கு ஆண்டிமடத்தில் இருந்து சிலம்பூருக்கு அரசு பேருந்து பயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து சிலுவைச்சேரி அருகே உள்ள புதுக்காலனி பகுதியில் சென்ற போது எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணித்த கோவிந்தசாமியும் படுகாயம் அடைந்து மார்பு எலும்பு உடைந்தது. இது குறித்து அரியலூர் சார்பு நீதி மன்றத்தில் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் தேதி 3 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 2007 ம் ஆண்டு கோவிந்தசாமி இறந்து விட்டார். பின்னர், வழக்கை விசாரித்த அரியலூர் விரைவு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட கோவிந்தசாமிக்கு 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடு அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்திரவிட்டு கடந்த 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு கூறியது. அரசு போக்குவரத்து கழகம் கோவிந்தசாமி குடும்பத்தினருக்கு வழங்காமல் இருந்து வந்துள்ளது. இந்த தீர்ப்பின் மீது கோவிந்தசாமியின் மனைவி சிவபாக்கியம், மகன்கள் கணேசன், ராமலிங்கம், மகள்கள் ஜெயலட்சுமி, கஸ்தூரி, ஆகியோர் பெரம்பலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 தேதி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதி மன்றம் கோவிந்தசாமியின் குடும்பத்தினருக்கு 95ஆயிரத்து 172 ரூபாயை அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்திரட்டு இன்று அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டது. அதன் பேரில் கோர்ட் அமீனாக்கள் அரியலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்து பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த போது ஜப்தி செய்தி நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 17:53:13
Privacy-Data & cookie usage: