Government doctors demonstrated at Ramanathapuram demanding 50% reservation in the Graduates

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கக்ஷட்டமைப்பின் சார்பில் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், மருத்துவபட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சீனியர் துணை தலைவர் டாக்டர் மலையரசு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் டாக்டர் முத்தரசன், பொருளாளர் டாக்டர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனையில் காலை பணியை முடித்துவிட்டு பிற்பகல் 12
மணிக்கு மேல் டாக்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!