பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் : கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

schedule
2017-08-22 | 08:24h
update
2026-07-03 | 10:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Government employees in Perambalur district Strike: Demonstrate demands

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அரசு ஊழியர்கள், வருவாய் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, வருவாய் துறையினர் போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் சதவீதம், கரூவூலக அலுவலர்கள் என ஏராளமானோர் பணிக்கு வரவில்லை. இதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 தாலூகா அலுவலகங்கள், 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 4பேரூராட்சி அலுவலகங்களில் மிக சொற்ப ஊழியர்களளே பணியாற்றுவதால் அலுலவகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 10:04:13
Privacy-Data & cookie usage: