ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் அரசின் கெடுபிடி வேலைச்சுமையை கண்டித்து முறையீடு

schedule
2017-02-20 | 07:27h
update
2026-06-25 | 05:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Government officials condemned the appeal of the Department of Rural Development workload

பெரம்பலூர் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் அரசு அலுவலர்கள் இன்று அரசின் பல்வேறு கெடுபிடி வேலைச்சுமையை கண்டித்து ஒட்டு மொத்த சிறுவிடுப்பும், அதிகாரிகளிடம் பெருந்திரள் முறையீடும் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் அரசு அலுவலர்களுக்கு, அளவுக்கு அதிகமான பணிச்சுமை வழங்கி துன்பப்படுத்துவதாகதாகவும், விடுமுறை நாட்களில் கூடு காணொளி ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் பல பேர் பங்கேற்பதை நினைவில் கொள்ளாமல் வசைபாடுவதுடன், கூட்டத்தையும் உரிய நேரத்தில் முடிக்காமல் விடுவதால் பெண்கள் வீடுகளுக்கு நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்கு திரும்பும் அவல நிலை உள்ளதாகவும், தமிழகம் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தனிநபர் கழிப்பிடம், கட்ட ஆணையிடுவது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கன்றுகளை வளர்க்க ஆணையிடுவதும், கடுமையான குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யமல் ஊராட்சி அலுவலர்களை சிரமப்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்களுக்கு அளவுக்கு அதிகமான வேலைப்பளுவை குறைக்க கோரியும் ஒட்டு மொத்த சிறுவிடுப்பும், அதிகாரிகளிடம் பெருந்திரள் முறையீடும் செய்தனர். முன்னதாக பெரம்பலூர் ஆட்சியர் அலுவலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த இருபால் அலுவலர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 05:34:05
Privacy-Data & cookie usage: