Government Sector Used Vehicle Auction; Perambalur Collector Notification!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் TN 46 G 0555 (Hindustan Motors, Ambassdor) கழிவு செய்த அரசுத்துறை வாகனம் 07.12.2023 அன்று மாலை 5.00 மணியளவில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது.

வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பார்வையிடலாம். வாகனத்தை ஏலத்தில் எடுக்க விரும்புபவர்கள் வருகின்ற 07.12.2023 அன்று ஏல நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.50/- (ரூபாய் ஐம்பது) செலுத்த வேண்டும், மேலும் பிணை வைப்புத்தொகை ரூ.2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) தொகையாக செலுத்தி ஏலத்தில் கலந்துக்கொள்ளலாம்.

ஏலம் எடுக்காதவர்களுக்கு பிணை வைப்புத்தொகை மீள வழங்கப்படும். அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக ஏலம் கேட்கப்பட்ட ஏலதாரர் முன் பிணை வைப்புத்தொகை போக ஏலத்தொகையில் 100% மற்றும் அதற்கான 18% GST தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். அவ்வாறு உடனடியாக செலுத்த தவறும் பட்சத்தில் ஏல நிபந்தனைகளை பின்பற்றாது நடந்து கொண்டதற்காக வைப்புத்தொகை திரும்ப வழங்கப்படாததுடன் மறு ஏலம் நடத்தப்படும்.

ஏலத்தில் கலந்து கொள்ளும் முன்பு வாகனத்தை பார்வையிட்டுக்கொள்ள வேண்டியது அவரவர்களின் முக்கிய பொறுப்பாகும். ஏலம் ஊர்ஜிதம் செய்த பின்பு வாகனத்தில் குறைபாடுகள் ஏதும் கூறப்படுமானால் அவை ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. மேலும், மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதியானதாகும். ஏலம் எடுத்தவர்கள் சீருந்தின் (RC) புத்தகத்தினை தனது சொந்த செலவிலேயே மாற்றம் செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுப்பவர் தங்களுடைய தனி நபர் ஆதார் மற்றும் அவரின் சொந்த பெயரில் GST எண் வைத்திருத்தல் மிகவும் அவசியம்.

ஏலத்தேதியினை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளவோ இரத்து செய்யவோ மாவட்ட ஆட்சித்தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஏலம் கேட்டிட தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் ஏலதாரருக்கு விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!