பெரம்பலூர் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள் வெறிச்செயல்!

schedule
2022-09-23 | 17:14h
update
2022-09-23 | 17:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Govt bus glass broken near Perambalur: Miscreants on rampage!

பெரம்பலூரில் இருந்து சின்னசேலத்திற்கு அரசு பஸ் நேற்று இரவு சென்றுக் கொண்டு இருந்தது. பஸ்சை பெரம்பலூரை சேர்ந்த முருகேசன் (வயது52) என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக நூத்தப்பூரை சேர்ந்த முருகேசன் (48) பணியில் இருந்தர். அப்போது பஸ் வெண்பாவூர் அருகே சென்றபோது இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கல் வீசி பஸ் கண்ணாடியை உடைத்தனர். உடனடியாக டிரைவர், நடத்துனர் மற்றும் பயணிகள் மர்ம நபர்களை பிடிக்க துரத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

Advertisement

இந்த கல் வீச்சு தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் முருகேசன் கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர். பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தால் பஸ்ஸை அங்கேயே நிறுத்திவிட்டு, பின்னாடி வந்த தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றி ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 22:33:43
Privacy-Data & cookie usage: