Gram of Paddy field crop farmers bringing in additional income for the agriculture sector to receive consulting.

பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறை விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையினைப் பயன்படுத்தி நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் தங்கள் நெல் வயலின் வரப்பு ஓரங்களில் உளுந்து பயிரிடுதல் மூலமாக கூடுதல் வருமானம் பெறலாம். மேலும் இதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகுவதால் நெற் பயிரினை தாக்கும் பூச்சிகளினை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு வரப்பு ஓரங்களில் உளுந்து பயிரிட ஏக்கருக்கு 1 கிலோ உளுந்து விதை போதுமானதாகும்.

இதற்கு தேவையான உளுந்து விதைகள் வம்பன்-5 மற்றும் வம்பன்-6 ஆகியவை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்லுக்கு கிலோவிற்கு ரூ.10 மானியமும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உளுந்து கிலோவிற்கு ரூ.25 மானியமும் வழங்கப்படுகிறது.

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் உளுந்து செயல்விளக்கம் அமைக்க எக்டேருக்கு ரூ.5 ஆயிரமும், மக்காச்சோளம் பயிரிட்ட வயலில் மக்காச்சோள அறுவடைக்கு பின் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்ட இயக்கத்தின் கீழ் நெல் வயலில் களைக் கொல்லி தெளிக்க ரூ.500ம், ஜிங்க் சல்பேட் உரமிட ரூ.500-ம் மானியம் வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம், வேளாண் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பபட்டுள்ளது.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!