நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 175 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் : திமுக கூட்டத்தில் தீர்மானம்

schedule
2018-12-25 | 13:03h
update
2018-12-25 | 13:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gram Panchayat Meeting in 175 Village Panchayats in Eastern District of Namakkal: Resolution at DMK meeting

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 175 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாமக்கல் மாவட்டதிமுகஅலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டஅவைத்தலைவர் உடையவர் தலைமை வகித்தார். மாவட்டபொறுப்பாளரும், மத்தியமுன்னாள் இணைஅமைச்சருமான காந்திசெல்வன் பங்கேற்றுபேசியதாவது:

வரும் பாராளுமன்றதேர்தலை எவ்வாறுஎதிர்நோக்குவதுகுறித்துவிளக்கமளித்தார்.நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல்,சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் ஆகிய மூன்றுசட்டபேரவைதொகுதியில் ஒன்றிய, நகராட்சி,பேரூராட்சிகளில் ஒன்றிய,நகராட்சி,பேரூராட்சி கட்சி கூட்டங்கள்,சார்புஅணிகூட்டங்கள் நடத்துவதுடன் அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி கட்சியை வலுப்படுத்தவேண்டும். நாமக்கல் பாராளுமன்ற தொகுதியை திமுக கோட்டையாகமாற்றும் வகையில் கட்சி தொண்டர்கள் தீவிரமாகபணியாற்றவேண்டும் என பேசினார்.

Advertisement

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கட்சி தலைவர் ஸ்டாலின் மக்களிடம் செல்வோம்,மக்களைசொல்வோம்,மக்கள் மனதை வெல்வோம் என்ற தாரகமந்திரத்தை அடிப்படையாகக் கொண்டுமத்திய, மாநில அரசுகளின் மிக மோசமான செயல்பாட்டுகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு அளிக்கவேண்டும் எனஅறிவித்துள்ளார்.

அதற்கிணங்கவரும் ஜனவரி 3 ம் தேதிமுதல் நாமக்கல் கிழக்குமாவட்டத்தில் உள்ள மூன்றுதொகுதிகளிலும் 175 ஊராட்சிகளில் ஊராட்சிகிராமசபைக் கூட்டம் நடத்துவது, நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல்,சேந்தமங்கலம் மற்றும் இராசிபுரம் ஆகிய மூன்று சட்ட பேரவை தொகுதியில் அனைத்து ஊராட்சி மற்றும் வார்டுகளில் ஆயிரத்து ஒன்றுகட்சி கொடியேற்றி கட்சியை வலுப்படுத்தவேண்டும்.

நாமக்கல் பாராளுமன்றதொகுதியைதிமுககோட்டையாகமாற்றுவது, மாவட்டம் முழுவதும் கட்சி உறுப்பினர் உரிமைச்சீட்டுவழங்குவதுஉள்ளிட்டபல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் இராமசுவாமி, பொன்னுசாமி, மாநில சட்டதிட்டதிருத்தக்குழுஉறுப்பினர் நக்கீரன், மாவட்டதுணைச் செயலாளர்கள்விமலாசிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமைசெயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், இளஞ்செழியன், நகரசெயலாளர் சங்கர், ராணாஆனந்த், ஒன்றியக் செயலாளர்கள் துரைசாமி, ஜெகநாதன், அசோக்குமார், துரை, கவுதம், பழனிவேல், பாலு, பாலசுந்தரம்,முத்துசாமி, சார்புஅணி அமைப்பாளர்கள் ராணிபெரியண்ணன், நவலடி, அறிவழகன், ஆனந்தன், சம்பத், சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 21:42:04
Privacy-Data & cookie usage: