குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்;  கலெக்டர் தகவல்!

schedule
2023-01-24 | 15:32h
update
2023-01-24 | 15:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gram Sabha meeting in Perambalur district on the occasion of Republic Day; Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடப்பிரியா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினமான 26.01.2023 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர்கள், தலைமையில் நடத்தப்பட உள்ளது.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.

Advertisement

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம்.
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்). அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு. ஜல் ஜீவன் இயக்கம்.பிரதம மந்திரி கிராம சாலை திட்டம். மக்கள் திட்டமிடல் இயக்கம். மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். மக்கள் நிலை ஆய்வு. வறுமை குறைப்பு திட்டம். பள்ளி மேலாண்மைக்குழு கூட்ட தீர்மானங்கள் கிராம சபைக்கூட்டத்தில் வைத்தல்.

குடியரசு தினமான 26.01.2023 அன்று கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிராம ஊராட்சிகளில் நடைபெறும்
கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத் தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்)- ஆல் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தினமான 26.01.2023 அன்று கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:42:33
Privacy-Data & cookie usage: