Gram Sabha meeting on May 1, Labour”s Day: Perambalur Collector’s notice

schedule
2017-04-27 | 14:53h
update
2026-09-23 | 16:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gram Sabha meeting on May 1, Labour”s Day: Perambalur Collector’s notice || தொழிலாளர் தினமான மே.1-ல் கிராம சபைக் கூட்டம் : பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

01.05.2017 அன்று 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தனி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தினமான 01.05.2017 அன்று 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தனி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது இக்கூட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும் அனைத்து ஊராட்சிமன்ற தனி அலுவலர்கள் தாங்கள் செய்த செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும். அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும்.

Advertisement

தொழிலாளர் தினமான 01.05.2017 அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசு நலத் திட்டங்களை இக்கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.

கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கி.ஊ) நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் தினமான 01.05.2017 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 16:03:48
Privacy-Data & cookie usage: