அக்., 2 ம் தேதி கிராம சபா கூட்டம்; விவாத பொருட்கள் : நாமக்கல் ஆட்சியர்

schedule
2018-09-27 | 11:59h
update
2020-07-26 | 06:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gram Sabha meeting on Oct 2; Discussion items: Namakkal Collector

நாமக்கல் : அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள பொருட்கள் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்டோபர் 2ம் தேதி செவ்வாய்கிழமை கிராமசபா கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் கிராம சபைக் கூட்டத்திற்கு முன் சமர்ப்பித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,மகளிர் திட்டம் உள்ளிட்ட 10 பொருள்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 00:54:03
Privacy-Data & cookie usage: