குடியரசு தின கிராம சபைக் கூட்டம் : உடும்பியம் ஊராட்சியில் ஆட்சிப் பணியாளர் கலந்து கொண்டார்

schedule
2017-01-26 | 13:52h
update
2026-06-25 | 15:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

gramma shaba meeting held Udumbiam Village

இந்திய நாட்டின் குடியரசு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெற்றது. வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள உடும்பியம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் கலந்து கொண்டார்.

Advertisement

இக்கூட்டத்தில் உடும்பியம் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஊராட்சியில் குடிநீர் வழங்கும் பணி, சுகாதாரம், பால் உற்பத்தி, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் அளிக்கபடுவது, தெரு விளக்குகள், குழந்தைகள் மைய செயல்பாடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கழிப்பிட வசதி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் திட்ட பயனாளிகள், குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் நியாய விலைக் கடைகளின் பதிவேடுகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சமூக தணிக்கை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 15:47:38
Privacy-Data & cookie usage: