Grievance Redressal Day Meeting Notice of Electricity Consumers in Perambalur
பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை12.07.2022 காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என அறிவிப்பு செய்துள்ளார்.