#Grievances related to food supply going in the camp, Dec 17 in perambalur
உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான குறைதீர்க்கும் நாள் முகாம் 17.12.2016 அன்று நடைபெறவுள்ளது.
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுவது வழக்கம்.
அதனடிப்படையில், 17.12.2016 அன்று பெரம்பலூர் வட்டம், வடக்குமாதவி கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் இரா.புஷ்பவதி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ப.கள்ளபிரான் தலைமையிலும், குன்னம் வட்டம் – ஓலைப்பாடி (மேற்கு) கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் இரா.மூர்த்தி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் – ஜெமீன் ஆத்தூர் கிராமத்தில் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ஆர்.கிருஷ்ணசாமி தலைமையிலும் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமாக குறைகளை பொதுமக்கள் தெரிவித்து பயனடையலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.