பெரம்பலூர் மாவட்டத்தில், குரூப் 4 : கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு

schedule
2017-11-02 | 12:23h
update
2026-07-04 | 03:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Group 4 in Perambalur District: Free Training Course for Village Administrative Officer Exam

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2017 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையின்படி தற்போது அறிவிக்கப்பட உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) மற்றும் குரூப் 4 பணிக்காலியிடங்களுக்கான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு 13.11.2017 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சுய விவரக்குறிப்பு மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் விவரங்களுடன் 10.11.2017-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 03:56:44
Privacy-Data & cookie usage: