பெரம்பலூர் அருகே அரசு பெண்கள் விடுதிக்கான காப்பாளர் பணி : ஆட்சியர் அறிவிப்பு

schedule
2017-11-07 | 09:11h
update
2026-07-04 | 05:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

guardian work for the Government Girls Hostels: Perambalur Collector Announcement

பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி பெண்கள் விடுதியில் விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

Advertisement

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பி;ல் வேப்பூர் ஒன்றியம் சு.ஆடுதுறை, அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் பெண்கள் விடுதியில் கூடுதலாக ஒரு பெண் விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிநாடுனர்களை நியமனம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்பணியிடத்திற்கு, பி.ஏ., பி.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., படிப்புடன் பி.எட். கல்வித் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ. 5000. வழங்கப்படும்.

மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக் விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் தங்கள் சுயவிவரம் (Bio-data) மற்றும் கல்விச்சான்று நகலுடன் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (RMSA), அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (கீழ்த்தளம்), பெரம்பலூர் – 621 212 என்ற முகவரிக்கு 20.11.2017 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 05:37:23
Privacy-Data & cookie usage: