பெரம்பலூர் அருகே உள்ள பிரம்மரிஷி மலையில், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கம் சித்தர், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு குருபூஜை விழா!

schedule
2022-07-03 | 17:53h
update
2022-07-03 | 17:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gurupuja ceremony for Srilashree Mahalingam Siddhar, Manikkavasakar Swami at Brahmarishi Hill near Perambalur!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ளள எளம்பலூர் சமத்துவபுரத்தில் உள்ள பிரம்மரிஷி மலை அடிவாரத்தில், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை விழா, காகபுஜண்டர் தலையாட்டி சித்தர், அன்னை சித்தர் அருளாசியுடன் உலக மக்கள் நலன் கருதி, காலை கோமாதா பூஜை யுடன், திருச்சி ஆகமப்பிரவீன் கயிலை சிவஸ்ரீ தெய்வசிகாமணி சிவாச்சாரியார் குழுவினர், ருத்ர ஜெப ஹோமமும், சிறப்பாக நடைபெற்றது.

ரோகிணி மாதாஜி தலைமையில் தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், சிவகாசி தொழிலதிபர் அதிபன் போஸ்(எ) நந்நி பாபா, முன்னிலையில் 210 மகா சித்தர்கள் யாகத்துடன் குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவில் அரசு வழக்கறிஞர் சுந்தரராஜன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தாளாளர் சிவசுப்பிரமணியம், செயலாளர் விவேகானந்தன், சென்னை தொழிலதிபர் வெற்றிமாறன், மருத்துவர் ராஜசிதம்பரம், கருங்குழி கிஷோர்குமார், ராதா மாதாஜி, தயாளன் சுவாமிகள், ஓய்வு பெற்ற (இ.ச.அ.து) இணை ஆணையர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர், சாதுக்களுக்கு வஸ்த்திரதானமும், பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 20:34:16
Privacy-Data & cookie usage: