மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண். 7, நாள்: 11.08.2026-இல், ஹஜ் 2027இல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப, ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. தற்காலிக பணிக்காலம் 03.04.2027 முதல் 25.06.2027 வரை சுமார் இரண்டு மாத காலமாகும். மத்திய / மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். இப்பணிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரிரயுர்னு www.hajcommittee.gov.in அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27.08.2026.
பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாநில ஹஜ் ஆய்வாளராக பணிபுரிய விருப்பமுள்ள பணியாளர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.