Heavy rains in Perambalur district this evening
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலையும் பலத்த காற்றுடன் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மின்சாரமும், துண்டிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை வேப்பந்தட்டை, கோனேரிப்பாளையம், பெரம்பலூர், குரும்பலூர், விளாமுத்தூர், நொச்சியம், செஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்து வருகிறது. கடந்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பலப் பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று நேற்று மாலையும் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.