பெரம்பலூரில் தட்டச்சு தேர்வு

schedule
2017-02-25 | 11:45h
update
2026-06-22 | 08:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

held the typewriting exam in perambalur

பெரம்பலூரில் தட்டச்சு தேர்வு : 1,137 பேர் கலந்து கொண்டனர்

தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெறும் தட்டச்சு தேர்வுகள் பெரம்பலூரில் தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை (பிப். 26) வரை நடைபெறும் தட்டச்சு தேர்வுகளில் பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 193 பேரும், சீனியர் கிரேடில் 160 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 535 பேரும், சீனியர் கிரேடில் 257 பேரும், ஆங்கிலம் உயர்வேகத் தேர்வில் (ஹைஸ்பீடு) 2 பேரும் என மொத்தம் 1,137 நபர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

கணினியில் வேகமாக தட்டச்சு செய்யவும், தனியார் மற்றும் அரசுத்துறையில் வேலைவாய்ப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும் தட்டச்சு தேர்வை, மாநிலம் முழுவதும் 97 மையங்களில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

தட்டச்சு தேர்வு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, அரசு மூலம் 2017 ஆம் ஆண்டில் 5,550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பெரம்பலூர் மாவட்ட தேர்வு மைய பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 08:18:17
Privacy-Data & cookie usage: