பெரம்பலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவர் கைது

schedule
2018-08-27 | 11:29h
update
2018-08-27 | 11:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Her husband was arrested on suspicion of betraying his wife near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள அத்தியூர் காலனியை சேர்ந்தவர் மலையன் மகன் நடராஜன் ( வயது 61 ) பழைய பேப்பர் பாட்டில் சேகரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலை (51) இவர்களுக்கு ராஜா என்ற மகனும், லெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

Advertisement

ராஜா சென்னையில் வேலை பார்த்துவருகிறார். நடராஜன் தனது மனைவி, அஞ்சலையின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் அருகில் இருந்து களைவெட்டி கழியால் மனைவியை தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்து அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறிந்து தகவல் அறிந்த வந்த மங்களமேடு போலிசார் அஞ்சலையின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் மங்களமேடு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 22:42:59
Privacy-Data & cookie usage: