பெரம்பலூரில் +2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி, லட்சுமி மருத்துவனையில் நடந்தது!

schedule
2023-05-16 | 08:16h
update
2023-05-16 | 08:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Higher education guidance program for students completing +2 in Perambalur, held at Lakshmi Hospital!

உன்னை அறிந்தால் மற்றும் ஏணி மாணவர் கல்வி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மக்களுக்கான மருத்துவக்கழக மாநில செயலாளர் சி.கருணாகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து பேசினார். இதில்,லட்சுமி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ச.த.ஜெயலெட்சுமி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் என்ற தலைப்பிலும், ஓய்வு பெற்ற செங்கல்பட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ.பாண்டியன் காவல்துறை மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகள் மற்றும் வேலைப்புகள் என்ற தலைப்பிலும், உன்னை அறிந்தால் கல்வி மேம்பாட்டு மைய இயக்குநரும், பொறியாளருமான கி.கலைநாதன் பொறியியல் சார்ந்த படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பிலும், வி.ஆர்.எம்., ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குநர் அக்ரி மு.மாதவன் வேளாண் சார்ந்த படிப்புகள் என்ற தலைப்பிலும், குரும்பலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் முனைவர் க.குமணன் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள் என்ற தலைப்பிலும் பேசினர். இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்று பயனடைந்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 20:57:20
Privacy-Data & cookie usage: