Hoarding 1,350 kilograms of sugar seized in Jaggery Mundy near Namakkal: Food Safety Officers Action

நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள வெல்லமண்டிகளில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு 1,350 கிலோ அஸ்கா சர்க்கரை மற்றும் பரிசோதனைக்காக இரண்டரை டன் வெல்லமும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பரமத்தி வேலுார் அதன் சுற்றுவட்டாரத்தில் கரும்பு சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை மையப்படுத்தி கபிலர்மலை வட்டாத்திற்கு உட்பட்ட பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வெல்லமண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேற்குறிப்பிட்ட வெல்ல மண்டிகளில் வெள்ளை சர்க்கரையை கலப்படம் செய்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்,விவசாயிகள் பரவலாக புகார் எழுப்பினர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆ.புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் 3 தனித்தனி குழுக்களாக பிரிந்து மேற்குறிப்பிட்ட பகுதியில் உள்ளவெல்ல மண்டிகளில் அவ்வப்போது திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சோதனையின்போது மேற்குறிப்பிட்ட பகுதியில் செயல்படும் சில வெல்லமண்டிகளில் இருந்து 1,350கிலோ எடை கொண்ட 27 மூட்டை சரக்கரை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அஸ்கா சர்க்கரை கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2.50 டன் எடை கொண்ட அஸ்கா சர்க்கரையையும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்காக பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆ.புஷ்பராஜ் கூறுகையில், கபிலர்மலை வட்டாரத்திற்கு உட்பட்ட பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டாரத்தில்150க்கும் அதிகமான வெல்ல மண்டிகள் உள்ளன. இந்த வெல்ல மண்டிகளில் கலப்படம் செய்து வெல்லம் தயாரிப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு1,350 கிலோ சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்.அப்போது கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இரண்டரை டன் வெல்லம் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. கலப்படம் செய்வதைகண்காணித்து தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டங்களும் நடத்தி அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!