பெரம்பலூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி ரொக்கம் திருட்டு

schedule
2018-06-11 | 16:03h
update
2026-07-06 | 15:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

hole the split of the house worth Rs 15 lakh cash, gold, silver theft near Perambalur

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் வீட்டின் ஓடுவில்லை பிரித்து ரூ.1.5 லட்சம் ரொக்கம் உள்பட தங்கம், வெள்ளி உள்பட ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பெரம்பலூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் – அரணாரை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் பாண்டியன் (வயது 50), இவர், பெரம்பலூர் மதனகோபாலபுரம் பால் கூட்டுறவு சங்க செயலாளராக உள்ளார். இந்நிலையில் இன்று வீட்டை பூட்டி வேலைக்கு சென்றுவிட்டனர்.

இன்று மதியம் சுமார் 4 மணியளவில் வீட்டை அக்கம்பக்கத்தினர் பார்த்த போது வீட்டின் ஓடு பிரித்துவிட்டு மர்ம நபர்கள் உள்ளே இறங்கி சென்றிருப்பது குறித்து பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அறிந்த பாண்டியன் வீட்டினுள் வந்து பார்த்த போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 57 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி, ரொக்கம் ரூ.1.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் , தடயவியல் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்த தடயங்கைள சேகரித்தனர்.

அப்போது கொள்ளையன் ஒருவன் கதவின் கண்ணாடியை உடைத்த போது சிந்திய ரத்தத்தை சுவற்றில் தோய்த்து சென்றதையும் வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அரணாரை பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 15:38:49
Privacy-Data & cookie usage: