உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுக்கடைகளுக்கு விடுமுறை: பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு

schedule
2022-07-07 | 21:45h
update
2026-06-17 | 02:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holiday for liquor shops ahead of local by-elections: Perambalur Collector’s announcement

பெரம்பலூர் மாவட்டத்தில், நாளை நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்கு பதிவு தினத்தன்றும், வாக்குகள் எண்ணும் நாளான ஜுலை.12ம் தேதி அன்றும், அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் (6317), வி.களத்தூர்(6478) ஆகிய கடைகள் மற்றும் சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு 07.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் 09.07.2022 அன்று நடு இரவு 12.00 மணி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

Advertisement

மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான 12.07.2022 அன்று காரை (6432), ஆலத்தூர் (6425), பாடாலூர் (6429), செங்குணம்(6438), எளம்பலூர் (6320), உப்போடை (6323), ஆத்தூர் ரோடு (6325,6326,6319), புதிய பேருந்து நிலையம் (6309,6311,6324), அய்யலூர்(6443), சிறுவாச்சூர் (6442) வேப்பந்தட்டை (6437), கிருஷ்ணாபுரம்(6479), அன்னமங்கலம் (6450), எசனை (6439) ஆகிய அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 02:30:41
Privacy-Data & cookie usage: