கவுரவ நிதியுதவி : மார்ச்.31க்குள் வங்கி கணக்குடன் ஆதாரை விவசாயிகள் இணைக்க வேண்டும்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2022-03-22 | 13:28h
update
2022-03-22 | 13:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Honorary Funding: Farmers should link the Aadhar with the bank account by March 31: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 73,618 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசு பி.எம்.கிசான் திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகளின் அனைவருடைய ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இணைத்த பின்னர் இந்திய தேசிய கட்டண நிறுவனம் (National payment Corporation of India) மூலம் பயனாளிகளுக்கு ஏப்ரல் 2022-ஆம் வருடம் அடுத்த தவணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அரசின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணுடன் இணைப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 10,606 பயனாளிகள் இணைப்பு செய்யவில்லை. எனவே இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து இணைக்கப்படவில்லை எனில் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் 31.03.2022-ஆம் தேதிக்குள் இணைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 18:10:35
Privacy-Data & cookie usage: