பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர் – சிறுமியர் களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய சிறுவா;களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், சிறுமிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை, மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேற்காணும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சிறுவா;களுக்கான விளையாட்டு பிரிவில் தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து, டேக்வோண்டோ, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் மற்றும் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளிலும், சிறுமிகளுக்கான விளையாட்டு பிரிவில் தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர் – வீராங்கணையராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சிறுவர் சிறுமியர்களுக்கான மாநில அளவிலான தேர்வு வரும் 19.06.2016 அன்று காலை 8.00 மணிக்கு சென்னையில் உள்ள ஜவர்ஹலால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ – மாணவியர் மேற்கண்ட விடுதிகளில் 2016-2017-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை 08.06.2016-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விவரங்களை http://www.sdat.tn.gov.in, என்ற இணைய தள முகவாpயில் தொpந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேர்வு நடைபெறும் 19.06.2016 அன்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.