பெரம்பலூரில் மின்கசிவால், வீடு எரிந்து சேதம்: சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

schedule
2022-10-28 | 17:46h
update
2022-10-28 | 17:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

House burnt down due to power leakage in Perambalur: Goods worth around 2 lakhs damaged!

Advertisement

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள தென்றல் நகர் முதல் தெருவில் கொளஞ்சிநாதன் மனைவி கஸ்தூரி. கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

2வது தெருவிலுள்ள அக்கா தனலட்சுமி, வீட்டில் இருக்கும் உடல்நிலை சரியில்லாத தந்தை ரெங்கசாமியை பார்க்க சென்றுள்ளார். அந்த சமயம் அவரது ஓடு வில்லை வீட்டில், ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டினுள் இருந்த பொருட்கள் உட்பட அனைத்தும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அதன் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என்றும், எறிந்து போன ஓடு வில்லை வீட்டின் மதிப்பும் சில லட்சங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 05:59:53
Privacy-Data & cookie usage: