இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி: பெரம்பலூர் கலெக்டர் பார்வையிட்டார்.

schedule
2022-12-23 | 15:23h
update
2022-12-23 | 15:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Housing construction for Sri Lankan Tamils: Perambalur Collector visited.


பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் பகுதியில் ரூ.3.60 கோடி மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான நவீன வசதிகளுடனான 72 குடியிருப்புகள் கட்டும் பணிகளை கலெக்டர் வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கையிலிருந்து கடல் கடந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு, பாதுகாப்பான, கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தரப்படும் என 27.08.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் 1 தொகுப்பிற்கு 4 வீடுகள் வீதம் 72 வீடுகள் 18 தொகுப்புகளாக புதிதாக கட்டுவதற்கான பணிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரால் 18.11.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொங்கப்பட்டது.

பணிகள் முறையாக நடைபெறுகிறதா எனவும், மழைக் காலங்களில் பணிகள் எவ்வாறு நடைபெற்றது எனவும் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறதா என கலெக்டர் வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டுமென துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அறிவழகன், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ராஜபாபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 09:37:31
Privacy-Data & cookie usage: