பள்ளிக்கு ஒதுக்கபட்ட நிலத்தில் வீட்டு மனை பட்டா: ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் மனு!

schedule
2021-06-29 | 05:14h
update
2021-06-29 | 05:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Housing Patta on land allotted to school: Petition to Collector seeking cancellation!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷணன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஸ்ரீதர் மற்றும் கிராம மக்கள் சார்பில் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

பாடலூர் ஊராட்சியில் அரசு மேல் நிலைப் பள்ளி பயன் பாட்டிற்காகவும், கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக 8 ஏக்கர் அரசு புறம் போக்கு தரிசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இந்த பள்ளியை மாதிரி மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியும், கூடுதலாக அதே வளாகத்தில் ஆங்கில பள்ளி துவங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு பாடாலூரில் வீடு இல்லாதவர்களுக்கு பள்ளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் 18 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதையறிந்த பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஊர்பொதுமக்கள் பள்ளி விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது என முறையீட்டின்பேரில் தவறுதலாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது, எனவே அந்த வீட்டு மனைப் பட்டா ரத்து செய்யப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 19ம்தேதி வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் அரசு பள்ளி நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். எனவே தவறுதலாக வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டாவை ரத்து செய்து அரசு பள்ளிக்கான நிலத்தை அரசு பள்ளி அனுபவத்திற்கவே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மனுவினை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:37:12
Privacy-Data & cookie usage: