பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் மனித சங்கிலி பேராட்டம்

schedule
2017-01-31 | 14:41h
update
2026-06-08 | 17:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Human chain protest condemning demonetary

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினர் மனித சங்கிலி பேராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் : அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக இந்தியா முழுவதும் உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்து விட்டதை தடுக்காத மோடி அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் மனித சங்கிலி பேராட்டம் அறிவிப்பை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Advertisement

சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, விவசாயிகள் சங்கம், என்.செல்லதுரை, விவசாய தொழிலாளர்கள் சங்கம் பி.ரமேஷ், மாதர் சங்கம், எ.கலையரசி, மின்ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.அகஸ்டின், ஆட்டோ சங்கம் சி.சண்முகம், வாலிபர் சங்கம் எஸ்.பி.டி.ராஜாங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 29.1.2017 முதல் 30.1.2017 வரை மூன்று நாட்கள் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மாவட்டம் முழுவதும் சென்று நடை பெற்றது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 17:57:41
Privacy-Data & cookie usage: