பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் கணவன்

மனைவி நஞ்சு அருந்தி தற்கொலை!

schedule
2021-01-06 | 17:54h
update
2021-01-06 | 17:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Husband and wife commit suicide by drinking poison in a family dispute near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட தொட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 65). கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜா (வயது 55). இருவருக்கும், இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். அக்கம் பக்த்தினர் வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடந்து உள்ளனர். இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பக்கவாத்தால் சரோஜா பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த இருவரும் இன்று மாலை அரளி விதையை மிச்சியில் அரைத்து குடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் – மனைவி இருவரும் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.06.2026 - 12:20:38
Privacy-Data & cookie usage: