பெரம்பலூர் அருகே கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கூலிப்படையை வைத்து கொலை செய்த கணவன் கைது: போலீசார் விசாரணை!

schedule
2023-10-23 | 16:12h
update
2023-10-23 | 16:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Husband arrested for murdering his wife who was obstructing a love affair near Perambalur with mercenaries: Police investigation!

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் 3வது வார்டை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்(34), பிரவீனா(24), தம்பதியினர். சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது. இவர்களுக்கு சர்வேஸ்வரன்(6), யோகேஸ்வரன்(3), என இரு குழந்தைகள் உள்ளனர்.

பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் ராஜ்குமார், நேற்றிரவு இரவு வழக்கம் போல் நைட் சிப்ட் வேலைக்கு செல்வதற்கு தயாரான நிலையில், மனைவி பிரவீனாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வயல் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்க வைப்பதற்காக பைக்கில் அழைத்து சென்றதாகவும், அப்போது,

எளம்பலூர் கிராமத்தில் இருந்து- செங்குணம் பிரிவு சாலைக்கு செல்லும் தார் சாலையில் 100 மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் சென்ற போது, திடீரென 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சோளக்காட்டிற்கு இழுத்துச் சென்று பிரவீனாவையும்-ராஜ்குமாரையும்- சரமாரியாக அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டதாகவும், படுகாயம் அடைந்த பிரவீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடிச் சென்று, அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்து தோள் மற்றும் கைப்பகுதியில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ராஜ்குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

Advertisement

பின்னர், தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த பிரவீனாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

கணவருடன் பைக்கில் சென்ற இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எளம்பலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராஜ்குமாருக்கும், திருப்பெயரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. அதோடு, 2 முறை அந்த பெண்ணுடன் வீட்டை விட்டு வௌியே ஓடியதும் தெரியவந்தது.

மேலும், ராஜ்குமாரின் ஆசை நாயகி வேறு ஒருவருடன் கைமாறி சென்றதால், ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை கூலிப்படை கொலையாளிகளை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. மேலும், 5 கூலிப்படை கொலையாளிகளை போலீஸ் தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பல கோணங்களிலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனே மனைவியை கூலிப்படை வைத்து தீர்த்து கட்டிய சம்பவம் பெரம்பலூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்காதலின் முடிவு மரணம் என்பதோடு, குடும்பத்தையும், குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.08.2026 - 04:29:56
Privacy-Data & cookie usage: