நானும் கொடுப்பேன்; பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண்நேரு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!

schedule
2026-01-11 | 13:46h
update
2026-01-12 | 12:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

I will also give; Perambalur MP K.N. Arun Nehru distributed Pongal gift packages!

பெரம்பலூர் அருகே உள்ள தம்பிரான்பட்டியிலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகையை சிறப்புமாக கொண்டாட பொது விநியோக திட்டத்தில் பயன்பெறும் 2 கோடியே 19 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பினை அறிவித்துள்ளார். அதில், பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு, வேட்டி,சேலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்க உத்தரவிட்டதன் பேரில் கடந்த ஜன.8ந் தேதி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு அவர் பங்கிற்கு பொங்கல் பரிசுகளை 3 நாட்கள் கழித்து நானும் வழங்குவேன் என ரேசன் பணியாளர் வழங்குவதை இடையில் நிறுத்தி பந்தல் போட்டு விழா மாதிரி நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே நகைப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிகழச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 01:42:14
Privacy-Data & cookie usage: