if i win. i willl live in Perambalur Parliamentary constituency Promise by IJK Candidate Parivendhar

RT Malai

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் தேர்தல் பிராச்சாரத்தில் ஈடுபட்ட, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி, தி.மு.க.கூட்டணி கட்சி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர், தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். பிரச்சார வழி நெடுகிலும், வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தருக்கு, ஆரத்தி எடுத்த பெண்கள் வெற்றித் திலமிட்டு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

தோகைமலை ஒன்றியத்தில் சீத்தப்பட்டியில் துவங்கி, புழுதேரி, ஆர்.டி.மலை, வடசேரி, காவல்காரன்பட்டி, பில்லூர், கீழவெளியூர், கல்லடை, பாதிரிப்பட்டி, தெலுங்கப்பட்டி, தோகைமலை, நாகனூர், கழுகூர், சின்னியம்பாளையம், பேரூர், மேலப்பட்டி, புத்தூர், ஆலத்தூர், ஆர்ச்சம்பட்டி, நெய்தலூர் காலனி, சேப்ளாபட்டி, முதலைப்பட்டி என 23-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர சூராவளி சுற்று பயணம் செய்து வாக்குகள் சேகாpத்தார்.

இதில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் (பொறுப்பாளர்) மற்றும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். குளித்தலை குளித்தலை எம்.எல்.ஏ ராமர் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் வேட்பாளபு பாரிவேந்தர் வாக்குசேகரித்த போது பேசியதாவது:

என்னை பெரம்பலூர் எம்பியாக நீங்கள் (பொதுமக்கள்) தேர்வு செய்தால் தொகுதிக்கே நான் குடி வந்துவிடுவேன். மேலும், உங்களது அனைத்து கோரிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்றித் தருவேன். தோகைமலை பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சரி செய்து அனைவருக்கும் காவிரி குடிநீர் கிடைத்திட ஏற்பாடு செய்வேன்.

கழூகூர் பெரிய ஏரியை தூர்வாரி பஞ்சப்பட்டி பெரிய ஏரியில் சேமித்து வைக்கப்படும் நீரை கழூகூர் ஏரிக்கு கொண்டு வர செய்து பல்லாயிரலக்கணக்கான ஏக்கர் விவசாயம் செழித்திடவும், தோகைமலை அரசு மேல் நிலைப்பள்ளியை இரண்டாக பிரித்து ஆண்கள், பெண்கள் என தனித்தனி பள்ளிகாளக மாற்றப்படும், தோகைமலைக்கு பத்திர பதிவு அலுவலகம் விரைவில் அமைக்கக்படும், இந்த பகுதி மக்களுக்கு தொழிச்சாலை அமைத்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பெருகவும் ஏற்பாடு செய்வேன்.

அனைத்து கிராமங்களுக்கும், கல்வி, மருத்துவ சேவை வசதிகள், ஏற்பாடு செய்திடுவேன். இதே போன்று வங்கிகளில் விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் முறையே விவசாயக் கடன், கல்விக் கடன் கிடைத்திட ஏற்பாடு செய்வேன். தோகைமலை பகுதியில் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வாரன பிறகு மனுக்களில் உள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்கவோ, அவர்களுக்கு ஆறுதல் கூறவோ நேரமில்லை. தற்போது எடப்பாடியின் தமிழக அரசு மோடியின் அடிமை அரசாக இருந்து வருகிறது. இந்த இரண்டு அரசுகளும் மக்களை பற்றி சிந்திக்காத கவலைப்படாத மக்கள் விரோத அரசுகளாகும். இந்த இரு அரசுகளையும் ஒரே நேரத்தில் வெளியேற்ற நல்ல தருணம் தான் இந்த தேர்தல். எனவே, நாட்டு நலன் கருதி உங்களின் நலன் கருதி எனக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். முன்னதாக ஆடல் பாடல், தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், திமுக செயற்குழு உறுப்பினர் சிவராமன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தருமர், ஐஜேகே கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா, மாவட்ட செயலாளர் பிச்சை, தி.மு.க பிரசாத், உட்பட காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுக, ஐ.யூ,எம்.எல், கொ.ம.தே.க உள்ளிட்ட ஏரளாமான கட்சியினர் திரளாக கலந்து பாரிவேந்தருக்கு வாக்குகள் சேகரித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!