பெரம்பலூர் அருகே கள்ளக்காதல் விவகாரம்; பெண்ணை கொலை செய்ய முயன்றவரை போலீசார்  சிறையில் அடைத்தனர்.

schedule
2020-12-05 | 07:38h
update
2020-12-05 | 07:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Iilligable affair near Perambalur; Police detained the man until he tried to kill the woman.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம், வடக்கு மாதவி சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 30), இவர் குழந்தைகளுடன் எசனையில் வசித்து வந்தார். ராஜா போர் போடும் ரிக்வண்டியில் டிரில்லராக பணி செய்து வந்துள்ளார். வேலைக்காக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டார். சம்பூர்ணம் தையல் மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த டிச.2ந்தேதி காலை 6 மணியளவில், கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பூர்ணத்தை ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொண்டை கடும் சேதமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement

இது குறித்து சம்பூர்ணத்தின் தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர நடத்தினர். சம்பவத்தின் போது இருந்த சம்பூர்ணத்தின் குழந்தைகள் ஷஸ்மிதா (வயது 10) அக் ஷய் (வயது 8) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று காலையில் வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டு ராஜா தனது அம்மா சம்பூர்ணத்திடம் வாக்குவாதம் செய்ததோடு, ஸ்கிப்பிங் கயிற்றால் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்கவிட முயற்சித்தாகவும், கூக்குரலிட்டதால், கொன்று விடுவேன் என மிரட்டியதாலும், குழந்தைகள் பயந்து போனதாகவும் தெரிவித்தனர். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, ராஜா அங்கிருந்து தப்பி தலைமறைவானன். முன்னதாக, சம்பூர்ணத்தின் குடும்பத்தாருக்கு சம்பூர்ணம் மயங்கி கிடப்பதாகவும், நல்லவன் போல் தகவலும் தெரிவித்துள்ளான். இதை பதிவு செய்த போலீசார், அடாது மழையிலும், விடாமல் நடத்திய விசாரணையில் தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சம்பூர்ணத்திற்கும், ராஜாவிற்கு கள்ளத்தொடர்பில் இருந்தாதல், ராஜாவின் வீட்டிற்கு தெரியவரவே திருமண ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வந்துள்ளனர். சம்பூர்ணத்திற்கு மற்றொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டதால், தன்னிடம் இருந்து விலகி வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என வற்புறுத்தி வந்தாகவும், சம்பவத்தன்று காலை பக்கத்து பெண் சரசு என்பவரிடம் தூது விட்டு தன்னை வீட்டிற்கு வரும்படி தெரிவித்தாகவும், அங்கு சென்ற போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாவும், ஆத்திரத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கியது போல் செய்ய முயற்சித்த குழந்தைகள் சத்தம் போட்டதால் தப்பித்தாகவும் செய்து குற்றத்தை ஒப்புக் கொண்டான். பின்னர், கைது செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முறையற்ற காதலால் ஏற்பட்ட அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 20:11:53
Privacy-Data & cookie usage: