மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டியை கண்டித்து பெரம்பலூரில் ஐஜேகே ஆர்ப்பாட்டம்!

schedule
2022-08-04 | 17:22h
update
2022-08-04 | 18:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

IJK protest in Perambalur against electricity tariff hike and GST!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வு, அரிசி, பால் உள்ளிட்ட பொருள்களுக்கான வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சியினர் நகரத் தலைவர் ஆர்.சி.ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பார்க்கவ குல முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் பி. அன்புதுரை, மாவட்டத் துணைத் தலைவர் எல். ரவிக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ், பொருளாளர் வி. பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் ஏ.வி.ஆர். ரகுபதி, மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அரிசி மற்றும் பால் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மத்திய, மாநில அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
இதில், மாவட்ட இளைஞரணித் தலைவர் எஸ்.எஸ். வினோத், ஒன்றியத் தலைவர்கள் அ. அழகுவேல், ப. ரகுபதி, எஸ். காமராஜ், டி. செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.05.2026 - 02:21:40
Privacy-Data & cookie usage: