கள்ளக்காதல் ஜோடி ஓட்டம்! கணவன் புகாரால், பெரம்பலூர் போலீசார் மீட்டு ஒப்படைப்பு!!

schedule
2019-11-19 | 07:35h
update
2019-11-19 | 07:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

illigal couple runaway! Husband’s complaint, Perambalur police Recovered

பெரம்பலூர் அருகே அடுத்தவர் மனைவியை அழைத்து சென்ற வாலிபரை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமாந்துறையை சேர்ந்தவர் கலியமூர்த்தி, இவரது மனைவி மலர்க்கொடி (வயது 33). கலியமூர்த்தி வெளிநாடு சென்றதால், பெரம்பலூரில் குழந்தைகள் படிப்பதற்காக தனி வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து, கொடுத்து இருந்தார். இந்நிலையில் . வெளிநாடு சென்று விட்டு வீடு திரும்பி வந்துள்ளார். திடீரென இவரது மனைவி மலர்க்கொடி காணமல் போய்விட்டார். இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தேடி வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி அருகே இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த போலீசார் மலர்க்கொடியை மீட்டனர். அப்போது உடனிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர், விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கோழியூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 37), என்பதும், இவர், பெரம்பலூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் மாஸ்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், கனகராஜீ, மலர்க்கொடியின் சொந்த ஊரான வடக்குமாதவி சாலையில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் குடியிருந்த போது திருமணத்திற்கு முன்பிருந்தே பழகி வந்ததும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், மலர்க்கொடியை ஒப்படைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 11:52:26
Privacy-Data & cookie usage: