அன்னமங்கலம் கிராமத்தில் இலுப்படியான் கருப்பசாமி தேர் திருவிழா

schedule
2017-05-17 | 16:57h
update
2026-06-25 | 03:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் இன்று இலுப்படியான் கருப்பசாமி தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கடந்த மே 2ந்தேதி பூச்சொரிதல் நடந்து. மே 9ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழா இன்று திருத்தேரோட்டம் இன்று நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். முக்கிய வீதிகளில் உலா வந்த தேர் நிலையை அடைந்தது.

Advertisement

இத்திருவிழாவில் அன்னமங்கலம், அரசலூர், விசுவக்குடி, பிள்ளையார் பாளையம், பூச்சோலை, தொண்டைமாந்துறை, எசனை, வேப்பந்தட்டை, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நாளை மஞ்சள் நீர் விளையாட்டுடன் நாளை திருவிழா நிறைவடைகிறது.

இதே போன்று குன்னம் அருகே சின்ன வெண்மணி, பெரிய வெண்மணி கிராமத்திலும் தேரோட்டம் நிகழச்சி நடந்தது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 03:43:19
Privacy-Data & cookie usage: