Implement internet site land registration details only after the approval of the owners! P. R. Pandian
தமிழக அரசு நில பதிவு விபரம் முழுமையும் கணினி மயமாக்கி பட்டா மாறுதல், பெறுவது, வில்லங்க சான்று பெறுவது. அடங்கல் பதிவேற்றம் செய்வது, பத்திரப் பதிவு செய்து சொத்து ஆவணங்கள் பெற்றுக் கொள்வது வரை அனைத்தையும் இணையதளங்கள் மூலம் நில உடமையாளர்களே பதிவிரக்கம் செய்து சான்றுகள் பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் செயல்படுத்துவதை வரவேற்க்கிறோம்.
அதே நேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பதிவேடுகளில் உள்ள தவறான, கவனக்குறைவான பதிவு விபரங்கள் தற்போதும் தொடர்கிறது . மேலும் கணினியில் பதிவேற்றம் செய்யும்போது ஏற்பட்ட தவறுதலான பதிவுகளாலும் பல்வேறு குளறுபடிகள் தொடர்கிறது இதனை போக்கிடுவது கட்டாயமாகிறது.
குத்தகைதாரர் பதிவு விபரங்களையும் ஒழுங்குப்படுத்த வேணடியுள்ளது.
பத்திரப்பதிவு செய்கிறபோதே நில உடமையாளரின் பெயரில் உடன் பட்டா மாறுதலும் அடையும் வகையில் கணினியில் மாற்றமும் இணைப்பும் கொண்டு வந்து பத்திரங்களோடு பட்டாவையும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.
கூட்டுப் பட்டா தேவைக்கேற்ப தனிநபர் பட்டாவாக மாற்றம் செய்திட வேண்டும்.
நில பதிவு முறைகளில் உள்ள குறைபாடுகள், தவறான பதிவுகள் நீக்கப்பட்டு திருத்தங்கள் செய்து இறுதி செய்யப்படும் விபர நகல் வருவாய் கிராமங்கள் தோறும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு ஒப்புதல் பெற்று உறுதி செய்த பின் இணையதள பயன்பாட்டை
நடைமுறைப்படுத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தேவைக்கேற்ப ஜமாபந்தி காலங்களில் ஆண்டுக்கொரு முறை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு கருத்தை அறிந்து வெளிப்படையான நிர்வாக அனுகுமுறை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
நெல் கொள்முதல் மறுப்பு
மத்திய அரசு நெல் கொள்முதல் கொள்கையை கைவிட முயற்ச்சி மேற்க்கொண்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நடப்பு குறுவை கொள்முதலுக்கு தேவையான ஈரப்பத சதத்தை உயர்த்தி அனுமதி வழங்க மறுத்ததோடு, முன்பணத்தை வழங்கவும் மத்திய அரசு மறுத்து விட்டதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து தமிழக அரசு உண்மை நிலையை தெளிவுப் படுத்த வேண்டும்.
மேறும் தமிழக அரசு வரும் சம்பா பருவத்திற்க்கான கொள்முதல் திட்டம் குறித்து உடன் வெளிப்படையாக அறிவித்திட வேண்டும்.
உற்பத்தியாளர் குழு
விவசாயிகளைக் கொண்ட உற்பத்தியாளர்கள் குழு என்ற பெயரில் தனது கொள்கை நிலையையும், பொருப்பையும் கைவிட மத்திய அரசு மறைமுக சதியில் ஈடுபட்டு வருகிறது. இது விவசாயிகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையாகும்
தீபாவளி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தீப ஒளியாய் விவசாயம் செழிக்க தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மன்னார்குடி ஒன்றிய செயலாளர் பி.கே.கோவிந்தராஜ்,கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.தெய்வமணி உடனிருந்தனர்.