பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில், குட்டை மற்றும் கிணற்றில், மூழ்கி இருவர் பலி!

schedule
2021-08-09 | 19:10h
update
2021-08-09 | 20:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In different incidents in Perambalur district, two people drowned Kill in a puddle and a well!

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்திற்கும், க.எறையூர் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள கல்குவாரியில், கை, கால்களை கழுவதற்காக சென்ற
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அயன்தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்(36) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் விஜயகுமார் உறவினரான கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரை பார்த்து வந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.

Advertisement

இதே போல, நெய்க்குப்பை அருகே சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகள் மாலினி இன்று மாலை, 3 மணியளவில், மாட்டிற்கு தீவனப் பயிர் அறுப்பதற்காக வயலுக்கு சென்றவர், வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடிப் பார்த்தபோது அவரது வயலில் உள்ள கிணற்றில் நீரில் மூழ்கி இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்த தகவலின் பேரில், வி.களத்தூர் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.09.2026 - 08:43:02
Privacy-Data & cookie usage: