In four cases involving homosexuality intimidated by fellow students, three arrested in Perambalur

பெரம்பலூரில் இயங்கி வரும் ரோவர் கல்விக்குழுமத்தின் தமிழ் வழி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பில் பயிலும், துறைமங்கலம் பகுதியை 14 வயது மாணவன் பயின்று வந்தார். அதே பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது படம் எடுத்து வைத்திருப்பதாக கூறி மிரட்டி வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கை மற்றும் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக கொடுமையை அனுபவித்த மாணவனை மேலும், அந்த நான்கு மாணவர்களும், பணம் கேட்டு மிரட்ட தொடங்கி உள்ளனர். பணம் கொடுக்க முடியாத மாணவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதோடு, இது குறித்து வெளியே தெரிந்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால், பயந்து போன மாணவன், பெற்றோருடன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையில், 4 மாணவர்களும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனை கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. இதன் பேரில் வழக்குப் செய்த போலீசார் வெங்கடேபுரம் பகுதி, அன்பு நகர், கே.கே நகர் பகுதியை சேர்ந்த மூன்று மாணவர்களை கைது செய்து திருச்சியில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருக்கும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலைப் பகுதியை சேர்ந்த மாணவனை தீவிர தேடி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு தலைநகர் சென்னையில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் பேருந்தில் சம்பவம் நடந்தது. இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதால் மாணவர்களின் ஒழுக்கம் சீர்குலைந்து வருகிறது.

கல்வியுடன் ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் கோடிகளை குவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்காளாக மாறிவருவது ஒரு காரணம் என்பது மட்டுமில்லாமல். கவனிப்பிற்காக கண்டு கொள்ளாமல் விட்டு விடும், அரசியல்வாதிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் ஒரு காரணம்.

# Roever Perambalur #Perambalur Students


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!