நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21150 பேர் தேர்ச்சி

schedule
2018-05-23 | 09:04h
update
2026-04-07 | 10:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Namakkal district, 10th grade general category 21150 pass

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 ஆயிரத்து150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 308 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 685 மாணவர்களும், 10 ஆயிரத்து 560 மாணவிகளும் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 245 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 10 ஆயிரத்து 949 மாணவர்களும், 10 ஆயிரத்து 201 மாணவிகளும் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement

மாணவர்கள் 93.70 சதவீதமும், மாணவிகள் 96.60 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு 10 வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 19வது இடத்தை பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 143 அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 831 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 9 ஆயிரத்து 964 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்த தேர்ச்சி 92 சதவீதமாகும்.

தேர்வு எழுதியவர்களில் தமிழ் பாடத்தில் 96.42 சதவீதமும், ஆங்கில பாடத்தில் 96.18 சதவீதமும், கணித பாடத்தில் 98.47 சதவீதமும், அறிவியல் பாடத்தில் 98.47 சதவீதமும் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 96.75 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2026 - 10:10:13
Privacy-Data & cookie usage: