ஓமனில், தவிக்கும் தொழிலாளர்களை மீட்டுத் தரக்கோரி மனு

schedule
2017-03-06 | 18:43h
update
2026-06-24 | 09:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Oman, who petition to collector, reinstate perambalur workers

ஓமன் நாட்டிற்கு வேலை சென்று சிக்கித் தவிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் தொழிலாளர்களை மீட்டுத் தரக்கோரி உறவினர்கள் மனு

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், ரவி, பெரியசாமி, மற்றும் தேவையூர் கிராமத்தைச் கந்தசாமி, செல்வராஜ், ஆகிய ஐந்து பேரும் ஓமன் நாட்டிற்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் சாதாரண லேபர் வேலைக்கு சென்றுள்ளனர்.

Advertisement

கடந்த 7 மாதங்களாக வேலை செய்த கம்பனியில் சம்பளம் வழங்காமலும், சம்பளம் கேட்பவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், அங்கிருந்து தொழிலாளார்கள் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் தொழிலாளர்கள் 5 பேரின் உறவினர்களும், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களை மீட்டுத் தரக்கோரி மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், ஓமன் நாட்டு தூதரக அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 09:48:56
Privacy-Data & cookie usage: