பெரம்பலூரில், 2 வீடுகள் பூட்டை உடைத்து ரூ.18 லட்சம் மதிப்பில் கொள்ளை; போலீசார் விசாரணை!

schedule
2022-10-03 | 15:22h
update
2022-10-03 | 15:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, 2 houses were locked and looted worth Rs 18 lakh; Police investigation!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், அவ்வை தெரு சேர்ந்தவர், ஜெயராமன். இவரது வீட்டில், விஜயகோபாலபுரத்தை சேர்ந்த, அமமுக தொழிற்நுட்ப பிரிவு செயலாளர் பிச்சைப்பிள்ளை மகன் கலைவாணன் (37) வாடகைக்கு, குடியிருந்து வருகிறார். பெரம்பலூர் வேளாண்துறை அலுவலகத்தில், தொகுப்பூதியம் அடிப்படையில், கணிப்பொறி பிரிவில் பணிபுரிந்தும் வருகிறார். நேற்றிரவு மாலை விடுமுறை என்பதால், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்சியில் உள்ள மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இன்று காலை அலுவலகம் சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்த போது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீட்டினுள் இருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கேமாரா, ரொக்கம் ரூ.47 ஆயிரமும் கொள்ளை போனது தெரியவந்தது.

Advertisement

வீட்டின் உரிமையார் ஜெயராமன் மனைவி திவ்யா வீட்டில் பார்த்த போது அவரது வீடும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து கலைவாணன் கொடுத்த தகவலின் பேரில், திருச்சி மாவட்டம், நெய்குளத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்ற திவ்யா திரும்பி வந்து பார்த்த போது, வீட்டு பீரோவில் இருந்த 28 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுகள், வெள்ளி பொருட்கள், மற்றும் ரொக்கம் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து, இரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் வெளியூர் செல்லும் பொது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும் படி காவல் துறையினர் பல முறை அறிவுறுத்தினாலும், பொதுமக்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. எனவே, பொதுமக்கள் இது போன்ற குற்ற செயல்களை தடுக்க அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு, வெளியூர் செல்வதே நல்லது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 00:35:52
Privacy-Data & cookie usage: