21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

schedule
2017-03-16 | 19:21h
update
2026-06-25 | 16:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur 21 demands of the postal workers strike

7 வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

Advertisement

குறிப்பட்ட கால அளவிற்குள் 7வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை நீக்க மத்தியரசு நடவடிக்கை மேற் கொண்டது. அரசுப்பணிகளில் தனியார்மயம், அவுட்சோர்சிங், ஒப்பந்தமயம் ஆகியவற்றை அனுமதிக்க கூடாது, புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும், காலியாக பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊழியர்களுக்கான பதவி உயர்வினை காலம் தாழ்த்தமால் வழங்க வேண்டும்,

கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான 5 சதவீத உச்சவரம்பினை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் தபால் ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தபால் நிலையங்கள், தபால் கிளை அலுவலகங்களில் ஆகியவற்றில் பணியாற்றும் தபால் ஊழியர்கள் பணியினை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் தபால் நிலைய பணிகள் அனைத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 16:55:17
Privacy-Data & cookie usage: