பெரம்பலூரில், வீடு வாடகைக்கு கேட்பது போல், பெண்ணிடம் 5 பவுன் தாலிச் செயின் பறிப்பு!

schedule
2022-11-17 | 14:50h
update
2022-11-17 | 14:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, a 5 pound talichain was snatched from a woman as if asking for house rent!

கற்பனை காட்சி

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழச்செல்வி (33). இவருக்கு சொந்தமான வீட்டில், மேல்தளத்தில் குடியிருந்து வருகிறார். கீழ்தளத்தை வாடகைக்கு விட உள்ளார். இந்நிலையயில் சுமார் 40 வயது உள்ள மர்ம நபர் வீட்டை வாடகைக்கு, கேட்க வந்துள்ளார். அப்போது, கீழ் வீட்டில், தற்போது வேறொருவர் குடியிருப்பதால், 15 நாட்கள் கழித்து வந்து பார்க்க தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆனால், மீண்டும் இன்று மதியம் அங்கு வந்த மர்ம நபர், உரிமையாளரிடம், வீட்டை சுற்றி காட்ட கேட்டுள்ளார். தமிழ்ச்செல்வியும், தனது கைக்குழந்தையுடன் வீட்டை சுற்றிக் காண்பித்து கொண்டிருந்த போது, அந்த பெண்ணின் தலையை பிடித்து சுவற்றில், தள்ளிய மர்ம நபர், பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு, அவன் வந்த ஸ்கூட்டியில் தப்பி சென்றான்.

இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாலிக்கொடியை பறித்து சென்ற கொள்ளையனை, அருகே உள்ள சி.சிடி.வி கேமரா காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீடு வாடகைக்கு கேட்பது போல், தாலிச்செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 03:49:16
Privacy-Data & cookie usage: