பெரம்பலூரில், மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு!

schedule
2020-01-17 | 13:00h
update
2020-01-17 | 13:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, a construction worker dies after falling from the third floor

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வதிஸ்டபுரம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கடவுள் (வயது 38) என்பவர், அவரது பக்கத்து ஊரான சிறுபாக்கம் நண்பர் காமராஜருடன் கன்ஸ்ட்ரக்சன் நடத்தும் வெங்கடேசன் (வயது 47) என்பவரிடம் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று, காலை பெரம்பலூர் ரோவர் சாலையில் உள்ள வசந்தி என்பவரின் வீட்டிற்கு அருகே பாண்டுரங்கன் என்பவரது புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அதற்கு கடவுள் சாரம் கட்டி கொண்டிருந்த போது மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து முதுகெலும்பு அடிபட்டது. சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்துவிட்டார்.

Advertisement

இது குறித்து கடவுளின் மனைவி மேகலா (வயது 35) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நித்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையில், காண்ட்ராக்டர் வெங்கடேசன் உரிய பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்காமல் வேலை வாங்கியதால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 21:19:20
Privacy-Data & cookie usage: