பெரம்பலூரில், தீபாவளி பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட வணிக நிறுவனங்களின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம்

schedule
2020-11-05 | 14:58h
update
2020-11-05 | 14:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, a consultation meeting with business executives to prevent the spread of corona virus during the Deepavali festival

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் பாதுகாப்புடன் தொழில்கள் மேற்கொள்வது குறித்து நகரில் உள்ள வணிக நிறுவனங்களின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசும் போது தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர் பட்டியலின் எண்ணிக்கை நாட்டிலே அதிகமாகவும், நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது. மேலும், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கை தளர்த்தப்பட்டு வருகிறது.

Advertisement

வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் உடல்நிலையை கண்கானித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள். எனவே வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலையில் பணிக்கு வரும்போது அவர்களின் உடல் தட்ப வெப்ப நிலையை பரிசோதித்து பிறகு அனுமதிப்பதோடு அவர்கள் முகக்கவசத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின்னரே கடையின் உள்ளே அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் மூக்கு, வாய் போன்ற பகுதிகள் நன்கு மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் தவறாமல் உடல் வெப்ப பரிசோதனை கருவியை கொண்டு சோதனை செய்த பின்னரே கடையின் உள்ளே அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களை தவறாமல் கிருமி நாசினி கொண்டு கைகளை நன்கு சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். அதற்கென தனியே ஊழியர்களை அமர்த்தி கண்கானித்திட வேண்டும்.

குறிப்பிட்ட அளவிலான வாடிக்கையாளர்கள் வெளியேறியபின் மற்றவர்களை உள்ள அனுமதிக்க வேண்டும். பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதால் வணிக நிறுவனங்கள் குளிர்சாதன வசதிகள் பயன்படுத்டதுவதை தவிர்த்திட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி கொண்டு நன்கு தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல், இருமல், தும்மல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள நபர்களை அனுமதிக்க கூடாது. விதிமுறைகளை மீறுவோர்மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள். இரத்த உயர் அழுத்தம் உள்ளவர்கள், கர்ப்பிணி மற்றும் சிறுவர்களை கடைக்கு அழைத்து வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு விதித்துள்ள விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொண்டு யாரும் பாதிக்கபடாமல் இருக்க தகுந்த நடவடிக்ககையை வணிக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். இந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ ராஜேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.கீதாராணி, வணிக நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 01:19:59
Privacy-Data & cookie usage: